Latestமலேசியா

96,000-க்கும் அதிகமான ஆறாம் படிவ மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி உதவித் தொகை 

 

புத்ராஜெயா, ஜூலை.09-2026 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கல்வி உதவித் தொகையை 96, 013 ஆறாம் படிவ மாணவர்கள் பெற்றுள்ளனர் அல்லது பெறவிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்திருக்கிறது. அவர்களுக்காக 14.4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 616 ஆறாம் படிவ மையங்களில் உள்ள 52,810 புதிய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வாண்டு 150 ரிங்கிட் வழங்கப்படும். இந்த உதவித் தொகை ஜூன் 28 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது.

 

ஆறாம் படிவ மாணவர்களுக்கான உதவித் தொகையை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, ஜூன் 8 ஆம் தேதி இணைந்த புதிய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது தொடரப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் பள்ளிக் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் எதிர்நோக்கும் நிதிச் சுமையைக் குறைப்பதில் மடானி அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. அதையே இந்த உதவித் தொகை விநியோகம் காட்டுகிறது. அதோடு ஆறாம் படிவக் கல்வியை மேலும் ஆக்ககரப்படுத்த அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பையும் இம்முயற்சி வெளிப்படுத்துவதாக அமைச்சு சுட்டிக் காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!