Latestமலேசியா

மலேசியத் தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றிய TACA தீபாவளி கொண்டாட்டம்

கோலாலம்பூர், நவம்பர்-22 – மலேசியத் தமிழர்களின் ஒற்றுமை, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், தமிழ் கலை கலாச்சார சங்கமான TACA-வின் தீபாவளி கொண்டாட்டம் கோலாலம்பூரில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை தான் ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் இந்தியத் தூதரகத்தின் பிரதிநிதி பிரதீஷ் குமார் மற்றும் OMS குழும நிறுவனங்களின் நிறுவனர் OMS தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

விழாவின் முக்கிய அம்சமாக, TACA அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக, தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு வந்து பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்து, தங்களது உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்த நிலையை அடைந்த 6 சாதனையாளர்களுக்கு TACA Icon Awards 2026 விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், 100 பேருக்கு இலவசக் காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பிலும் விழாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டது.

விழாவில் உரையாற்றிய TACA தலைவர் Dr ஆர்.வி. ஷ்யாம் பிரசாத், மலேசியத் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, தமிழ் மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே சங்கத்தின் முக்கிய நோக்கம் என்றார்.

கலை நிகழ்ச்சிகள், இசை மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!