Latestசினிமா

35-ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு மகுடம்! 3 விருதுகளை வென்று அசத்தல்

கோலாலம்பூர், நவம்பர்-22 – உள்ளூர் தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், 35-ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் உள்நாட்டுத் தமிழ்த் திரைப்படங்கள் 3 விருதுகளை வென்று முத்திரை பதித்துள்ளன.

நேற்று நடைபெற்ற FFM35 விருதளிப்பு விழாவில், MACAI திரைப்படம் 2 முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது.

அப்படத்தில் நடித்த குபேன் மகாதேவன், சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று பெருமை சேர்த்தார்.

அதே திரைப்படத்திற்காக Sun-J பெருமாள் மற்றும் சிவானந்தம் பெரியண்ணன் ஆகியோர் சிறந்த மூலக்கதைக்கான விருதை வென்றனர்.

இதனிடையே, BLUES திரைப்படத்திற்காக SKYZEN STUDIOS நிறுவனம் சிறந்த திரைப்படப் போஸ்டருக்கான விருதைப் பெற்றது.

மொத்தமாக 6 பிரிவுகளில் முன்மொழியப்பட்ட MACAI இரண்டு விருதுகளையும், BLUES திரைப்படம் ஒரு விருதையும் வென்றுள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதுகள் போல், மலேசியாவின் இந்த பிரதான தேசியத் திரைப்பட விருது விழாவில், தமிழ்த் திரைப்படங்கள் 3 விருதுகளை வென்றிருப்பது, உள்நாட்டுத் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களின் திறமைக்கும் படைப்பாற்றலுக்கும் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!