Latestமலேசியா

பேராக்கில் 2022 முதல் 23,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கண் பரிசோதனை – பெற்றோருக்கு அறிவுறுத்தல்

சுங்கை சிப்புட், நவம்பர்-22 – பேராக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 23,500 பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேராக் மாநில Amal Makmur நலச் சங்கமான PERKAM, மாநிலக் கல்வி இலாகா மற்றும் தனியார் கண் பரிசோதனை மையங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

அவ்வகையில் அண்மையில் சுங்கை சிப்புட், ஹீவுட் (Heawood) தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 135 மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலருக்குப் பார்வைக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், பெற்றோர் தங்களது பிள்ளைகளை மேல் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்திய சமூகத்தினர் மூக்குக் கண்ணாடிகள் வாங்குவதற்கும் கண் சிகிச்சைக்கும் மித்ரா மூலம் அதிகபட்சமாக 1,000 ரிங்கிட் வரை நிதியுதவி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அடுத்தாண்டு பாலர் பள்ளி மற்றும் முதலாமாண்டில் சேரவுள்ள பிள்ளைகளின் கண்களை முன்கூட்டியே பரிசோதிக்குமாறு, PERKAM செயலாளரும் இந்த இலவச கண் பரிசோதனைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான கே. நாச்சிமுத்து வலியுறுத்தினார்.

கைத்தொலைபேசி உள்ளிட்ட மின்னியல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, பிள்ளைகளின் கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், ஆண்டுக்கு இருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!