Latestமலேசியா

புதிய மலேசியக் கடவுச்சீட்டு அறிமுகம் தள்ளிவைப்பு – குடிநுழைவுத் துறை

புத்ராஜெயா, மே-26–ஜூன் 1ஆம் தேதி அறிமுகமாகவிருந்த புதிய மலேசியக் கடவுச்சீட்டு அதாவது Passport வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.

குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சக்காரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) கூறுகையில், புதிய கடவுச்சீட்டு எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

பொதுமக்களுக்கு சிரமமின்றி சேவை வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கடவுச்சீட்டுகள் அனைத்தும் அவற்றின் காலாவதி தேதி வரை செல்லுபடியாகும் என்பதால், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.

கடவுச்சீட்டு புதுப்பிப்பு சேவைகளும் வழக்கம்போல் தொடரும். முன்னதாக, புதிய கடவுச்சீட்டில் 94 புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ஹோலோகிராம், மறைபாதுகாப்பு குறியீடுகள் மற்றும் புறஊதாக் கதிர் (UV) அச்சிடல் போன்ற அம்சங்கள் இடம்பெற்று, போலி கடவுச்சீட்டுகளைத் தடுக்க உதவும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!