Latestமலேசியா

மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் நடைமுறை இல்லை – MITI

கோலாலம்பூர், ஜூன் 4 – அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் நடைமுறை இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) விளக்கம் அளித்துள்ளது.

இந்த அறிக்கை மலேசியாவின் வேலைநிலைகளை குற்றம் சாட்டவில்லை என்றும் மாறாக இறக்குமதி பொருட்களைச் சோதிக்கும் சட்ட அமைப்பைப் பற்றிய குறைபாட்டையே சுட்டிக்காட்டுகிறது என்றும் கூறப்படுகின்றது.

மேலும், மனிதக் கடத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளைத் தடுக்க மலேசியாவில் பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

அத்துடன், மலேசியப் பொருட்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்ற தகவல் தற்போது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும், USTR தனது விசாரணையை முடித்து அதிகாரப்பூர்வ முடிவை வெளியிட்ட பிறகே எந்தவொரு வரியும் அமல்படுத்தப்படும் என்றும் MITI தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!