
நேப்பாளம், ஜூன் 4 – எவரெஸ்ட் மலையில் 6 நாட்கள் காணாமல் போன நேப்பாளத்தைச் சேர்ந்த மலையேறி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மே 29ஆம் தேதி உலகின் உயரமான 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் மலையின் மேல்பகுதியை அடைந்த அவர் அங்கிருந்து இறங்கும் போது காணாமல் போனார்.
இதனிடையே நேப்பாளத்தின் சகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழுவினர் (SPCC), மயங்கிய நிலையில் இருந்த அவரைக் கண்டுபிடித்தனர். பின்னர் உடனடியாக அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மலை உச்சியை அடைந்த அவர் கீழே இறங்கும் போது “டெத் சோன்” (Death Zone) எனப்படும் ஆக்ஸிஜன் குறைந்த ஆபத்தான பகுதியில் சிக்கியதாக நம்பப்படுகிறது.



