Latestமலேசியா

‘அப்பட்டமான பெருநில புத்தி’: KLCC வெளியே சுற்றுப் பயணியின் செயலால் வெடித்த பொது மக்களின் கோபம்

கோலாலம்பூர், ஜூன்-11 – கோலாலம்பூர், KLCC வளாகத்திற்கு வெளியே சுற்றுப் பயணி ஒருவரின் செயல் பொது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

​Threads சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தில், வெளிநாட்டு சுற்றுப் பயணி என நம்பப்படும் பெண் ஒருவர், Suria KLCC வணிக வளாகத்தின் அருகே உள்ள பொது இடத்தில் தனது மகனைச் சிறுநீர் கழிக்க அனுமதித்துள்ளது தெரியவந்துள்ளது.

​நடைபாதைக்கு அருகிலுள்ள வாய்க்கால் துவாரத்தில் அந்தச் சிறுவன் சிறுநீர் கழிப்பதைப் படம் பிடித்துப் பகிர்ந்துள்ள Afest என்ற பயனர், அந்தப் பெண் சீனப் பெருநிலத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுத் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

​அருகிலேயே பொதுக் கழிப்பறை வசதிகள் இருந்தபோதிலும், மக்கள் அதிகம் நடமாடும் ஒரு சுற்றுலாத் தலத்தில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது சமூக ஊடகங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!