Latestஉலகம்

உலகின் அதிக சம்பளம் பெறும் CEO-களில் இரண்டாவது இடம் பிடித்தார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷங்க் மித்ரா

கோலாலம்பூர், ஜூன் 30 – ஷங்க் மித்ரா (Shankh Mitra) உலகின் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் Shankh Mitra, Welltower நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியதற்காக, 821 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 3.33 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஊதியத்தைப் பெற்றுள்ளார்.

முதல் இடத்திலுள்ள எலன் மஸ்க் (Elon Musk) Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியதற்கு 158 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 641.48 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஊதியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Shankh Mitra, இந்தியாவின் ஜடாவ்ப்பூர் பல்கலைக்கழகத்தில் (Jadavpur University) கருவியியல் மற்றும் மின்னணு பொறியியலில் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா வணிக பள்ளியில் (Columbia Business School) முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!