
பிரான்ஸ், ஜூலை 5 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடகிழக்கு பிரான்சிலுள்ள அருங்காட்சியகத்தில், சுமார் 4 மில்லியன் யூரோ (Euro) அதாவது 22 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையை குறிவைத்து சுமார் 20 நகைகளைத் திருடிச் சென்றதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எச்சரிக்கை அலாரம் ஒலித்தபோதும், பாதுகாப்பு குழுவினர் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பே கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் பணிக்கு வந்த அங்குள்ள துப்புரவுப் பணியாளர் சம்பவத்தைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காண கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த அருங்காட்சியகம், புகழ்பெற்ற நகை மற்றும் கண்ணாடி கலைஞரான ரெனே லாலிக்கின் (Rene Lalique) படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் 2011ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.



