Latestமலேசியா

மலாய்க்காரர் அல்லாதோர் 8 பேர் தானா? DBKL பணியாளர் எண்ணிக்கை குறித்த வதந்திகளுக்கு ஹானா இயோ மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை-22- கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லில் எட்டே எட்டு இந்திய, சீன ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள் என்ற வதந்தியை கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 

வாட்சப்பில் பரவி வரும் அந்த போஸ்டர்கள் முற்றிலும் பொய்யானவை என்றார் அவர்.

 

ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி DBKL-ன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 9,131 ஆகும்; அவர்களில் 490 இந்தியர்களும், 22 சீனர்களும் அடங்குவர்.

 

நிர்வாக மற்றும் தொழில்முறைப் பிரிவில் மட்டும் 10 இந்திய அதிகாரிகளும், 2 சீன அதிகாரிகளும் பணியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

என்றாலும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

 

இதையடுத்து வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு முறைகளை மறுஆய்வு செய்ய DBKL-க்கு உத்தரவிட்டுள்ளார்.

 

ஆனால், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற விவகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!