Latestமலேசியா

சிரம்பானில் கால்பந்துப் போட்டியின் பெனால்டி ஷூட்-அவுட்டின் போது சரிந்து விழுந்து ஆடவர் மரணம்

சிரம்பான், ஜூலை-27-நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியொன்றின் போது ஆடவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்நபர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்படுவதற்கு முன்பே சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிரம்பான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Muhamad Yatim Osman தெரிவித்தார்.

கோல் காவலராக இருந்த அந்த 45 வயது ஆடவர் பெனால்டி ஷூட்-அவுட்டின் போது மயங்கி விழுந்தது குறித்து சிரம்பான் மாவட்டக் காவல் தலைமையகத்திற்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமான செயல்களோ அல்லது குற்றச் சதியோ நடந்ததற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அக்கால்பந்து போட்டியை பாரிசான் நேஷனல் இளைஞர் பிரிவின் ரெம்பாவ் கிளை ஏற்பாடு செய்திருந்ததாக Muhamad Yatim அறிக்கையொன்றில் குறிப்பிட்டார்.

சம்பவம் நிகழ்ந்த போது, அவ்வாடவருக்கு ஊக்கமளிக்கவும் ஆதரவு கொடுக்கவும் அவரது மனைவியும் கால்பந்து திடலில் உடனிருந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் Tuanku Jaafar மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

அந்நபருக்கு இருதய நோய் இருந்தததும் அவர் செர்டாங்கில் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!