Latestமலேசியா

செப்பாங்கில் F1 பந்தயம்: அனைத்து வருவாயும் பஹ்ரேய்னுக்கே; மலேசியா உள்ளூர் செலவுகளை மட்டுமே ஏற்கும்

செப்பாங், ஜூலை-29-வரும் அக்டோபரில் செப்பாங் அனைத்துலகப் பந்தயத் தளமான SIC-யில் நடைபெறவுள்ள Formula 1 கார் பந்தயத்தின் அனைத்து வருவாயையும் பஹ்ரேய்னே பெறவுள்ளது.

மலேசியா உள்ளூர் ஏற்பாட்டுச் செலவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

​மேற்காசியாவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்த பந்தயம் மலேசியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான 70 முதல் 80 மில்லியன் அமெரிக்க டாலர் ஏற்பாட்டுக் கட்டணத்தை பஹ்ரைனே செலுத்துவதாக, SIC தலைமை நிர்வாக அதிகாரி Azhan Shafriman Hanif உறுதிப்படுத்தியுள்ளார்.

​மலேசியாவின் பொறுப்பு, பந்தயச் சுற்றை F1 தரத்திற்கு கொண்டு வர ஆகும் 40 மில்லியன் ரிங்கிட் செலவோடு முடிவடைகிறது என்றார் அவர்.

இதனால், டிக்கெட் விற்பனை, உபசரிப்பு மற்றும் பிற வருவாய்களை பஹ்ரேய்னே முழுமையாகப் பெறுவதுடன், டிக்கெட் விலையையும் தீர்மானிக்கும்.

​டிக்கெட் மற்றும் இதர வணிக விவரங்கள் குறித்துப் பேச பஹ்ரேய்ன் குழுவினர் அடுத்த வாரம் மலேசியா வரவுள்ளனர்.

அப்போது மலேசிய இரசிகர்களுக்கு சிறப்பு விலையில் டிக்கெட்டுகளைப் பெற முயற்சிப்பதாக Azhan தெரிவித்துள்ளார்.

​இந்த ‘Gulf Air Bahrain Grand Prix’ பந்தயம் அக்டோபர் 2 முதல் 4 வரை செப்பாங்கில் நடைபெறவுள்ளது.

2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு F1 மலேசியாவுக்குத் திரும்புவதால், உள்ளூர் இரசிகர்களிடையே பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!