
கோத்தா கினபாலு, செப்டம்பர் 14 – கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தில், 72 வயது வாயோதிகர் 44 வயது பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டை மறுத்து, இன்று குற்றமற்றவர் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி மாலை 6 முதல் 7 மணிக்குள், ஜாலான் செப்பாங்கார், கம்போங் ஸ்ரீ கெனாங்கான் (Kampung Sri Kenangan, Jalan Sepanggar) பகுதியிலுள்ள வீட்டில் கொலை நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, செபாங்கார் பகுதியில் பல இடங்களில் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மனநல மதிப்பீட்டில் விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியானவர் என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் அடுத்த வழக்கு அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறும்.



