
சைபர்ஜெயா, செப்-14-Tan Sri Dato’ Dr. R. Palan எழுதியுள்ள ‘Stuck in the Middle’ என்ற புதிய நூல் அண்மையில் சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது. வியாபாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த தலைமைத்துவத்தையும் முடிவெடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் நூலாக இது அமைந்துள்ளது. இந்நூலை University of Malaya Press பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Federation of Malaysian Manufacturers (FMM) நிறுவனத்தின் தலைவர் Emeritus Tan Sri Dato’ Dr. Soh Thian Lai சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகால தீவிர முயற்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இந்நூல், அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு தடுமாற்றங்களுக்கு மத்தியில் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது குறித்து முக்கிய வழிகாட்டல்களை வழங்குவதாக நூலாசிரியர் Tan Sri Palan தெரிவித்தார்.
எது சரி, எது தவறு என்பதற்கு இடையே முடிவெடுப்பதைவிட, இரண்டு நியாயமான நிலைகளுக்கு நடுவில் நின்று சிறந்த முடிவை எடுப்பதே உண்மையான தலைமைத்துவம் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, Cyberjaya University வேந்தர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வாழ்த்து தெரிவித்த காணொளியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.
அதில், COVID-19 பெருந்தொற்று காலத்தில் துல்லியமான சான்றுகள் இல்லாத சூழலிலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

நூல் வெளியீட்டு விழாவில் Top Glove Corporation Bhd நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாகத் தலைவர் Tan Sri Dr. Lim Wee Chai உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ‘Stuck in the Middle’ நூல் விற்பனை மூலம் கிடைக்கும் அனைத்து Royalty Proceeds தொகையும் கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



