
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-11 – நேற்று பெர்சியாரான் சுபாங் இண்டா ( Persiaran Subang Indah) பகுதியிலிருக்கும் பேரங்காடிக்கருகே, நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆற்றில் தவறி விழுந்த 7 வயது இந்தோனேசிய சிறுவன், நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து நேற்றிரவு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சுபாங் ஜெயா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 9 வீரர்கள், நீரில் மீட்புப் பணி குழுவினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு படகுகள், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



