
சுங்கை பட்டாணி, செப்.02- கெடா, Tikam Batuவில் Taman Seri Jenarisசில் உள்ள வணிகர் ஒருவரின் வீட்டினுள் நேற்று அதிகாலை புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பணப் பெட்டகத்தையும் மெர்சிடிஸ் பெங் காரையும் களவாடிச் சென்றனர். அதனால் அவ்வணிகருக்கு 550,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதியம் வீடு திரும்பிய பின்னர்தான் அத்திருட்டு குறித்து அவருக்குத் தெரிய வந்தது. வீடு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவ்வணிகர், பணப் பெட்டகமும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரும் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றதாக கோலா மூடா மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. எனினும் திருட்டுடன் தொடர்பிருப்பத்காகச் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களைப் பார்த்ததாகக் கூறிய பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக Hanyan கூறினார்.



