Latestசிங்கப்பூர்மலேசியா

சிங்கப்பூர் ஆடவரைக் கடத்திய குற்றச்சாட்டை மறுத்த நான்கு சீன நாட்டவர்கள்

பாலிக் பூலாவ், செப்-10-சிங்கப்பூர் ஆடவரைக் கடத்தி, S$1 மில்லியன் (சுமார் 3.1 மில்லியன் ரிங்கிட்) பிணைப் பணம் கோரியதாக தங்க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நான்கு சீனப் பிரஜைகள் மறுத்து விசாரணை கோரியுள்ளார். அவர்களில் மூவர் ஆண்கள். ஒருவர் பெண்.

Liu Ting Jun (46), Guan Siqi (24), Huang Jian (39), Wang Hao Yu (32) ஆகிய நால்வரும் மேலும் நால்வருடன் கடந்த ஜூலை 26 ஆம் தேதி Bayan Lepasசில் உள்ள பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் அந்தச் சிங்கப்பூர் நாட்டவரைக் கடத்தி சட்டவிரோதமாகத் தடுத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் அவர்கள் அக்குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மறுத்து விசாரணை கோரினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க தற்காப்புத் தரப்பு கோரிய போதிலும், கடத்தல் குற்றம் தீவிரமானது என்பதையும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதையும் சுட்டிக் காட்டி அரசுத் தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனை அடுத்து நீதிபதி Ahzal Fariz Ahmad Khairuddin ஜாமீன் மனுவை நிராகரித்து, அடுத்த விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கடந்த வாரம் கெடா, Alor Setarரில் காவல் துறை இரு அந்நிய நாட்டவர்களைச் சுட்டுக் கொன்றதாக இதற்கு முன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அவர்கள் டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டவர்களை அணுகி, வேலை அல்லது சுற்றுலா வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள். Taman Amiraவில் நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து ஆண்களையும் பெண் ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தமது 72 வயது சகோதரர் மலேசியாவில் கடத்தப்பட்டதாக சிங்கப்பூர் மூதாட்டி ஒருவர் ஆகஸ்ட் 6ஆம் தேதி அளித்த புகாரைத் தொடர்ந்து அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!