Latestமலேசியா

மாணவர்களை மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற 60 வயது நபர் உயிரிழப்பு

சிலாங்கூர், செப்டம்பர் 15 – சிலாங்கூர், பத்தாங் காலியிலுள்ள உலு தாமு வனக் காப்பகத்தில் மாணவர்களை மலையேற்ற நடவடிக்கைக்கு அழைத்துச் சென்ற 60 வயது உள்ளூர் ஆடவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

மாணவர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த ஆடவர் மயங்கி விழுந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் அஷ்ருல் ரியெசால் அஸ்பார் (Ashrul Riezal Asbar) தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த நான்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் அவரை பரிசோதித்து, உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மலையிலிருந்து கீழே கொண்டு வந்து, மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!