Latestமலேசியா

ஆசிய விளையாட்டில் தங்கத்தைத் தக்கவைத்த சிவசங்கரி; அடுத்த இலக்கு உலகின் நம்பர் 1, ஒலிம்பிக் தங்கம்!

அய்ச்சி-நாகோயா, செப்டம்பர்-28,ஜப்பானில் நடைபெற்று வரும் அய்ச்சி-நாகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தற்காத்துக் கொண்ட தேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி, உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுப்பதும் ஒலிம்பிக் தங்கம் வெல்வதுமே தனது அடுத்த இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

​நாகோயா கிஞ்சோ புடோ அரங்கில் நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதியாட்டத்தில், இந்தியாவின் அனாஹத் சிங்கை (Anahat Singh) நேரடி செட்களில் வீழ்த்தி கெடாவைச் சேர்ந்த 27 வயதான சிவசங்கரி மலேசியாவின் 6-ஆவது தங்கப் பதக்கத்தை உறுதிச் செய்தார்.

இதன் மூலம், தேசிய அணி இம்முறை 6 தங்கப் பதங்கங்களை வெல்ல வைத்திருந்த இலக்கு நிறைவேறியது.

இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் அவர் 2028 லோஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடியாகத் தகுதிப் பெற்றுள்ளார்.

​தற்போது உலகத் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள சிவசங்கரி, முதல் நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய அழுத்தங்களைச் சிறப்பாகக் கையாண்டதாகக் குறிப்பிட்டார்.

நடப்புப் பருவத்தின் இறுதிக்குள் உலகின் முதல் 3 இடங்களுக்குள் நுழைவதையும், பின்னர் தரவரிசையின் உச்சியை அடைந்து மலேசியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தைப் பெற்றுத் தருவதையுமே தமது கனவாகக் கொண்டு கடினமாக உழைக்கப் போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!