Latestமலேசியாவிளையாட்டு

ஹரிமாவ் மலாயாவுக்கு வாழ்த்து; பொது விடுமுறை இல்லை – அன்வார்

கோலாலம்பூர், அக்டோபர் 6 – வியட்நாமை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 2026 பிஃபா ஆசியான் கிண்ணத்தில் (Piala ASEAN FIFA 2026) மூன்றாவது இடத்தைப் பிடித்த ஹரிமாவ் மலாயா அணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் மலேசிய அணி போட்டித் தொடரை தோல்வியின்றியும், ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமலும் நிறைவு செய்ததாக அன்வார் தெரிவித்தார். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், இந்த வெற்றியைத் தொடர்ந்து பொது விடுமுறை வழங்கப்படாது என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அன்வார், “நாளை வழக்கம்போல் வேலைக்குச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மலேசியா–வியட்நாம் இடையிலான மூன்றாவது இடத்திற்கான போட்டி ஜகார்த்தாவில் நடைபெற்றது. 62ஆவது நிமிடத்தில் ஃபெர்கஸ் டியர்னி (Fergus Tierney) அடித்த ஒரே கோல் மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!