Latestமலேசியா

பெர்மாத்தாங் பாவோ சந்தை வடிகாலில் துணியால் சுற்றப்பட்ட ஆண் சடலம் கண்டெடுப்பு

பெர்மாத்தாங் பாவோ, அக்-13-பினாங்கு, பெர்மாத்தாங் பாவோவில் Sama Gagah சந்தைப் பகுதியில் இன்று காலை வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அச்சம்பவம் பொருட்கள் வாங்க சந்தைக்கு வந்திருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீன் வாங்குவதற்காகச் சந்தைக்கு வந்தபோது துணியால் சுற்றப்பட்ட சடலத்தைக் கண்டதாக Asma எனும் மாது ஒருவர் தெரிவித்தார். அச்சம்பவம் குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதாக அவர் கூறினார்.

Sama Gagah சந்தைக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வந்து செல்வதாகவும், இது போன்று இதுவரை நிகழ்ந்ததில்லை எனவும் Asma தெரிவித்தார். இவ்வேளையில், பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு அருகில் செல்லாமல் இருக்க காவல்துறையினர் மஞ்சள் நிறத் தடுப்பு நாடாவைக் கட்டியிருந்ததால், சடலத்தை அருகில் சென்று பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அச்சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாகக் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. உயிரிழந்தவரின் அடையாளம், சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!