Latestமலேசியா

பஹாங் ஜெராந்துட் சாலையில் கார் கவிழ்ந்து தீப்பற்றிய சம்பவம்; ஓட்டுநரைக் காணவில்லை

பஹாங், அக்டோபர் 14 – பஹாங், ஜெராந்துட்–குவாலா தஹான் (Jerantut–Kuala Tahan) சாலையின் 26ஆவது கிலோமீட்டரில், வெள்ளை நிற டொயோட்டா விஷ் (Toyota Wish) ரக பல்நோக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து முழுமையாகத் தீப்பற்றி எரிந்தது. இவ்விபத்து நேற்று அதிகாலை 5.20 மணியளவில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

குவாலா தஹானிலிருந்து ஜெராந்துட் நோக்கிச் சென்ற வாகனம், சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஜெராந்துட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரண்தெண்ட் நோர் அஸ்மான் யூசோஃப் (Superintendan Nor Azman Yusof) தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தில் யாரும் காணப்படாததால், வாகனத்தில் இருந்தவர் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது. ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளரின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்விபத்து குறித்த தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!