Latestமலேசியா

MIROS இயக்குநர் வாரிய உறுப்பினராகப் பேராசிரியர் டாக்டர் குலந்தையன் கே.சி. மணி நியமனம்

கோலாலம்பூர், அக்டோபர் 14 –மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான MIROS-இன் இயக்குநர் வாரிய உறுப்பினராகப் பேராசிரியர் டாக்டர் குலந்தையன் கே.சி. மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது மூன்றாண்டு பதவிக்காலம், 2026 அக்டோபர் 5 முதல் 2029 அக்டோபர் 4 வரை அமலில் இருக்கும் என MIROS வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம், சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், சாலைப் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் துணைபுரியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் புலத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் குலந்தையன், சாலைப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் காயத் தடுப்பு தொடர்பான ஆய்வுகளில் பங்களித்து வருகிறார்.

போக்குவரத்துப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், 2022 முதல் 2024 வரையிலான தவணைக்கு, சாலைப் பாதுகாப்புக்கான அரசு சாரா அமைப்புகளின் உலகளாவிய கூட்டணியின் இயக்குநர் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் மலேசியர் மற்றும் ஆசியர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்படும் MIROS, அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நாட்டின் சாலைப் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!