Latestமலேசியா

நஜீப் 1MDB வழக்கில் தண்டனையை ஒத்திவைக்கக் கோரிய மனு நிராகரிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 14 – முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் (Najib Razak), 1MDB ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனையையும் குற்றத் தீர்ப்பையும் ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிபதி, மனுவில் போதிய காரணங்கள் இல்லையெனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்தார். நஜீப்பின் உடல்நிலை தொடர்பான மருத்துவத் தேவைகள் அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் நிபுணர்களால் சிறப்பாகக் கவனிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2025 டிசம்பர் 26ஆம் தேதி, 2.28 பில்லியன் ரிங்கிட் 1MDB நிதி முறைக்கேடு தொடர்பாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் பணமோசடி தொடர்பான 21 குற்றச்சாட்டுகளில் நஜீப் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

தற்போது SRC International வழக்கில் ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜீப்பின் 1MDB வழக்கிற்கான 15 ஆண்டு சிறைத் தண்டனை, 2028ஆம் ஆண்டு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் உரிமை அவருக்கு இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!