Latestமலேசியா

கோயில் சிலைகள் உடைப்பு: சமூக ஆர்வலர் உட்பட மூவர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 15 – ஜாலான் கிள்ளான் லாமாவிலுள்ள கோயிலில் நான்கு சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சமூக ஆர்வலர் தாமிம் தாஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak) உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, சிலாங்கூர் மாநிலம் பெர்னாங்கில் (Beranang) மூவரும் கைது செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் (Fadil Marsus) தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக மூவரும் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர், காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் நோக்கம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு, வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்தி மத உணர்வுகளை அவமதித்ததாகக் கருதப்படும் குற்றவியல் சட்டம் பிரிவு 295இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!