Latestஉலகம்

சுபாங்கிலிருந்து தனியார் விமானத்தில் 521 கிலோ போதைப்பொருள் கடத்த முயற்சி; பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம்

மிண்டானோவ், அக்டோபர்-16,சுபாங் விமான நிலையத்திலிருந்து லாவோஸ் சென்ற தனியார் விமானத்தில் 521 கிலோ கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், பிலிப்பின்ஸைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பிலிப்பின்ஸின் மிண்டானோவ் பகுதியைச் சேர்ந்த அந்த அரசியல்வாதி, போதைப்பொருளைக் கடத்துவதற்காகத் தனியார் விமானத்தை வாடகைக்கு அமர்த்த நிதியுதவி வழங்கியதாக அந்நாட்டின் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், விசாரணை தொடருவதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

அக்டோபர் ஒன்றாம் தேதி, சுபாங் விமான நிலையத்திலிருந்து லாவோஸ் சென்ற தனியார் விமானம், அங்கிருந்து பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவுக்குப் போதைப்பொருளைக் கடத்தப் பயன்படுத்தப்படவிருந்ததாக நம்பப்படுகிறது.

விமானத்தில் ஏற்றப்படவிருந்த 23 பெட்டிகளில், 21 பெட்டிகளிலிருந்து 521 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் விமானப் பணியாளர்கள் உட்பட 13 பேர் லாவோஸில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனிடையே, மலேசியாவிலிருந்து லாவோஸுக்குப் போதைப்பொருள் கொண்டுச் செல்லப்படவில்லை என்பதை மலேசிய போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!