Latestமலேசியா

நேப்பாள பேரிடர்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தலா RM 5,000 நிதியுதவி

ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-18 – நேப்பாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பினாங்கைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தலா 5,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த இப்பேரிடரால் பினாங்கைச் சேர்ந்த 4 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவர்களில் 3 குடும்பங்கள் இந்த நிதியுதவியை ஏற்றுக்கொண்டதாக அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் தெரிவித்தார்.

உதவி வழங்கிய நிகழ்வில், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துணையமைச்சர் லிம் ஹுய் யிங், அறப்பணி வாரியத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, நேப்பாளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலேசியக் குடும்பங்களுக்கு மத்திய அரசாங்கமும் சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும் என, லிங்கேஷ்வரன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைக் கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால், உடனடி உதவி அவசியம் என்றார் அவர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட அம்மூன்று குடும்பங்களுக்கு துணையமைச்சர் லிம் ஹுய் யிங் கூடுதல் நிதியுதவி வழங்கியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங்கும் ஒரு குடும்பத்திற்கு 5,000 ரிங்கிட் வழங்கினார்.

இவ்வேளையில், காப்புறுதி மற்றும் சொத்துரிமை விவகாரங்களை மேற்கொள்ள ஏதுவாக, உயிரிழப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு RSN ராயர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!