Latestமலேசியா

அம்பாங் கோயிலில் இரு குழுக்களிடையே மோதல்: 13 பேர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 19 – சிலாங்கூர், கம்போங் பாரு அம்பாங், ஜாலான் மெர்டேக்காவிலுள்ள சீனக் கோயிலில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 15 முதல் 20 வயதுக்குட்பட்ட 13 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை அதிகாலை 12 மணியளவில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இம்மோதலை, அங்கு பணியில் இருந்த மலேசிய சிவில் தற்காப்புப் படையினர் (RELA) தலையிட்டு கட்டுப்படுத்தினர். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரும்புத் தடிக்கம்பு மற்றும் பேஸ்பால் மட்டை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

கோயில் நிர்வாகத்தினர் 13 பேரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் கைருல் அனுவார் காலிட் (Khairul Anuar) இதனைத் தெரிவித்தார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. இளைஞர்கள் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்றும், பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!