Latestமலேசியா

கால்நடை மருத்துவப் படிப்பில் மலேசிய மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு: Goon கல்லூரி – Bogor பல்கலைக்கழகம் கூட்டு ஒப்பந்தம்

கோலாலம்பூர், அக்-20-மலேசியாவில் நிலவும் கால்நடை மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், மாணவர்களுக்கு உயர்கல்விக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் Goon இன்டர்நேஷனல் கல்லூரியும் இந்தோனேசியாவின் Bogor பல்கலைக்கழகமும் இணைந்து புதிய கூட்டு ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

மலேசியாவில் சுமார் 8,500 கால்நடை மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது சுமார் 2,600 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால் சுமார் 5,900 மருத்துவர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. உள்ளூர் பொதுப் பல்கலைக்கழகங்களில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் குறைவாக இருப்பதால், அக்கூட்டு ஒப்பந்தம் புதிய மாற்று வழியைத் திறந்துள்ளது.

அதன் கீழ், மாணவர்கள் முதலில் Goon இன்டர்நேஷனல் கல்லூரியில் Foundation in Science படிப்பை முடித்த பின், இந்தோனேசியாவில் உள்ள Bogor பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடரலாம்.

2027ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 1.2 மில்லியன் ரிங்கிட் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மேலும், Affin வங்கி மற்றும் RHB வங்கி மூலம் கல்விக் கடன் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வேளையில், பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் மலேசிய கால்நடை மருத்துவக் கவுன்சிலின் பதிவு மற்றும் அங்கீகார விதிகளுக்கு உட்பட்டு நாட்டில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம் என Goon இன்டர்நேஷனல் கல்லூரியின் இயக்குநர் பிரபாகரன் பெருமாள் தெரிவித்தார்.

இதனிடையே பாடத்திட்டம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார் Bogor பல்கலைக்கழகத்தின் இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்புத் திட்டத் தலைவர் Dr.drh. Esthi….

Bogor பல்கலைக்கழகம் மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாகும். மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி, கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள், Goon கல்லூரி மூலம் இந்தோனேசியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!