Latestமலேசியா

“பிஎன் பாரு” உருவாகுமா? பதிவு ரத்துக்குப் பின் ராமசாமி கேள்வி

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கூட்டணி முடிவுக்கு வருமா அல்லது புதிய வடிவில் மீண்டும் உருவாகுமா எனும் கேள்வி எழுப்பியுள்ளார் உரிமை கட்சித் தலைவர் டாக்டர் பி. ராமசாமி.

பெர்சத்து கட்சி அளித்த புகார்களில், கூட்டணியின் அரசியலமைப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றன.

மேலும், கூட்டணியின் அமைப்பில் பெர்சத்துவின் ஒப்புதல் இல்லாமல் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், ஹம்சா ஜைனுடின் (Hamzah Zainuddin) புதிதாகத் தொடங்கிய வாசாவான் கட்சிக்கு வழிவகுக்கும் நோக்கில் பெர்சத்து ஓரங்கட்டப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டதாக ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 22ஆம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய சங்கப் பதிவகம், அக்டோபர் 20ஆம் தேதி PN பதிவை ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து PN நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இதற்கிடையே பெர்சத்து பக்கத்தான் ஹராப்பானுடன் நெருக்கமாகச் செயல்படக் கூடிய சூழலில், “PN Baru” எனும் புதிய கூட்டணி உருவாகக்கூடும் என ராமசாமி ஊகிக்கிறார். கடந்த காலங்களில் அம்னோ பாரு உருவான அடிப்படையில் அந்த சூழலுக்கு வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகிறார். அப்படி நடந்தால் இந்திய கட்சிகளைக் கொண்ட ஐபிஆர் (IPR) கூட்டணியும் புதிய கூட்டணிக்குள் உள்வாங்கப்படலாம் என அவர் கருதுகிறார்.

PN பதிவு ரத்தானது நாட்டின் அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடும் என்றும், அம்னோ–பாஸ் ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்றும் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!