Latestமலேசியா

70-க்கும் மேற்பட்ட குழந்தைகள்; 58 பேர் மட்டுமே உயிருடன் – வறுமையில் தவிக்கும் குடும்பம்

ஆப்கானிஸ்தான், அக்டோபர் 22 – ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமட் சாதிக் என்பவருக்கு நான்கு மனைவிகள் மூலம் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் 58 பேர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ள நிலையில் அவரது இளைய குழந்தைக்கு மூன்று மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

சாதிக்கின் குடும்பம் கதவுகள், ஜன்னல்கள் இல்லாத சிறிய மண் வீட்டில் வறுமையில் வாழ்ந்து வருகிறது. உணவு, உடை, விறகு வாங்கக்கூடப் போதிய பணம் இல்லாததால், குழந்தைகள் சில நேரங்களில் பட்டினியுடன் உறங்குகின்றனர்.

கார் விற்பனை மையத்தில் வேலை செய்யும் சாதிக்குக் கார் விற்பனை ஒவ்வொன்றுக்கும் 1,000 ஆப்கானி கமிஷனாகக் கிடைக்கிறது. இதுவே குடும்பத்தின் ஒரே வருமானமாகும். தனது குழந்தைகளின் பெயர்கள் அனைத்தையும் நினைவில் வைத்திருக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மனைவிகள் சிறுவயதிலேயே திருமணம் செய்துகொண்டதாகவும், குழந்தைகளைப் பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் காசநோய், தட்டம்மை போன்ற நோய்களால் சில குழந்தைகள் உயிரிழந்ததாகவும் சாதிக் கூறியுள்ளார். இத்தனை குழந்தைகளைப் பெற்றதற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் நான்கில் மூன்று பேர் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேலும், 2023ஆம் ஆண்டு தரவுகளின்படி, 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!