
செப்பாங், அக்டோபர்-29,இராணுவத் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தக்கூடிய 49.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான AI சில்லுகளைக் கொண்ட 30 கணினி server-களை KLIA சுங்க இலாகா பறிமுதல் செய்துள்ளது.
அக்டோபர் 15-ஆம் தேதி, KLIA சுயேட்சை வர்த்தக மண்டலத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.
ஆசிய நாட்டொன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்தச் server-கள், மின்னியல் உதிரிபாகங்கள் எனப் பொய்யாக அறிவிக்கப்பட்டு, மலேசியா வழியாக மற்றொரு ஆசிய நாட்டுக்கு அனுப்பப்படவிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வேளையில், இந்தச் சில்லுகள் பேரழிவு ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவத் தொழில்நுட்பங்களின் உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்படக்கூடியவை என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஒரே கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஐந்தாவது சம்பவம் இதுவாகும்.
இதுவரை 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், யாரும் கைதுச் செய்யப்படவில்லை என KLIA சுங்க இலாகா கூறிற்று.



