Latestஉலகம்

காகித உறிஞ்சு குழாய்களில் புற்றுநோயுடன் தொடர்புடைய இரசாயனங்கள்; புதிய ஆய்வில் தகவல்

சியோல், அக்டோபர்-29,பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்களைக் காட்டிலும், காகித உறிஞ்சு குழாய்களே சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என நாம் இதுநாள் வரை கேள்விப்பட்டுள்ளோம்.

ஆனால், அந்தக் காகித உறிஞ்சு குழாய்களில் தான் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் இருப்பதாகத் தென்கொரிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

காகித உறிஞ்சு குழாய்களில் நீண்டகாலம் சிதையாமல் நிலைத்திருக்கும் PFAS எனப்படும் இராசாயனங்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வகை இரசாயனங்களில் சில, புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளுடன் தொடர்புடையவை எனக் கூறப்படுகிறது.

என்றாலும், காகித உறிஞ்சு குழாய்களைப் பயன்படுத்துவதால் நேரடியாகப் புற்றுநோய் ஏற்படும் என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக ஆய்வாளர்கள் இங்குக் கூற வருவது…சுற்றுச்சூழலுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!