Latestமலேசியா

“AI-ஐ நாம் கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையெனில் அது நம்மை கட்டுப்படுத்தும்” – அன்வார்

கோலாலம்பூர், செப்டம்பர் 24 – செயற்கை நுண்ணறிவு அதாவது AI தொழில்நுட்பத்தை பொறுப்புடனும் நெறிமுறையுடனும் நிர்வகிக்கத் தவறினால், எதிர்காலத்தில் AI-யே மனிதர்களை வழிநடத்தும் நிலை ஏற்படலாமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் (Hangzhou) நடைபெற்ற 5ஆவது உலக டிஜிட்டல் வர்த்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய அன்வார், “செயற்கை நுண்ணறிவை நாம் ஆள வேண்டும்; இல்லையெனில் செயற்கை நுண்ணறிவு நம்மை ஆளும்” எனக் குறிப்பிட்டார். AI வளர்ச்சி மனிதகுலத்தின் நலனுக்குப் பயன்படும் வகையில் நெறிமுறை சார்ந்த கட்டமைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவைப் பொறுத்தவரை, AI தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிப்பது, சிறு தொழில்கள் போட்டித்திறனை மேம்படுத்த உதவுவது மற்றும் தொழில்துறைகளை அதிக மதிப்புள்ள பணிகளை நோக்கி நகர்த்துவது முக்கிய நோக்கங்கள் என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, AI-யின் விரைவான வளர்ச்சி வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப இடைவெளியை மேலும் அதிகரிக்கக் கூடாது என்றும் அன்வார் எச்சரித்தார். வளரும் நாடுகளும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பலன்களைப் பெறுவதற்கு திறந்த மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் வர்த்தக முறையை உருவாக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!