Latestமலேசியா

AI பயன்பாட்டை அதிகரிக்கவும், இடைவெளியைக் குறைக்கவும் மலேசியா பாடுபடும்; கோபிந்த் சிங் உறுதி

துபாய், ஏப்ரல் 25, மலேசியா, UAE எனப்படும் ஐக்கிய அரபு சிற்றரசு, ருவாண்டா ஆகிய நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில், AI பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

நான்காம் தொழிற்புரட்சிக்கான மையத்தின் (C4IR) உலகளாவிய கூட்டமைவின் கீழ், இம்மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

AI நெறிமுறைகளையும், அதன் நிர்வாக நடைமுறைகளையும் விளம்பரப்படுத்தி, அதன் மூலம் சுற்றுவட்டார நாடுகளை ஊக்குவித்து, திறன்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தொழில்நுட்பத்தின் முழுப் பயனையும் அடையவும் இவ்வொத்துழைப்பு அமையும்.

தற்போது நடைபெற்று வரும் துபாய் AI வாரத்தையொட்டி இப்புதிய ஒத்துழைப்பு துவக்கம் கண்டது.

Dubai Future Foundation, C4IR Rwanda மற்றும் MyDigital Corporation எனப்படும் மலேசிய இலக்கவியல் கூட்டுறவு கழகம் இடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றத்தின் வழி இது உறுதியானது.

இதன்வழி AI இலக்கவியல் தொழில் நுட்பத்தில் மக்கள் பயனடைவதோடு, பொருளாதாரத்தில் வலுப்பெறவும் இது உதவும்.

உலகளாவிய நிலையில், ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமையளிப்பதாக கோபிந் சிங் கூறினார்.

இதற்கு முன் இத்திட்டம் UAE மற்றும் ருவாண்டாவை மட்டுமே உள்ளடக்கியிருந்தது; தற்போது மலேசியாவும் இணைந்துள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!