Latestமலேசியா

கூலாய் & சிரம்பானில் களைக் கட்டிய ‘Colours of India’-வின் குளோபல் மெகா தீபாவளி பெருவிற்பனை; அடுத்து ஜோகூர் பாரு & கூலிமை கலக்க வருகிறது

கோலாலாம்பூர், செப்டம்பர்-30,

‘Colours of India’ ஏற்பாட்டில் தென்னக மாநில அளவிலான குளோபல் மெகா தீபாவளி பெருவிற்பனை அண்மையில் ஒரே நேரத்தில் 2 இடங்களில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

செப்டம்பர் 24 முதல் 28 வரை ஜோகூரின் கூலாயிலும், நெகிரி செம்பிலான் சிரம்பானிலும் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சுற்று வட்டார மக்களிடமிருந்து பேராதரவு கிடைத்தது.

கூலாயில் முதன் முறையாக நடைபெற்ற ஜோகூர் குளோபல் மெகா தீபாவளி கண்காட்சியை, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தொடர்புத் துறை துணையமைச்சருமான தியோ நீ சிங் தொடங்கி வைத்தார்.

அங்கு Commune கண்காட்சி மண்டபத்தில் தீபாவளிக்கான உடைகள், அலங்காரங்கள் மற்றும் பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

நெகிரி செம்பிலானில் Seremban Prima-வில் நடைபெற்ற குளோபல் மெகா தீபாவளி வர்த்தக் கண்காட்சிக்கு, ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் Dr ராஜசேகரன் குணசேகரன் சிறப்பு வருகை புரிந்தார்.

அடுத்து, இந்த குளோபல் மெகா தீபாவளி பெருவிற்பனை Johor Bahru, Toppen பேரங்காடியில் நாளை அக்டோபர் 1 முதல் 5 வரையிலும், கெடா, கூலிம், South Kedah Chinese Recreation Club அல்லது CRC வளாகத்தில் அக்டோபர் 2 முதல் 5 வரையும் நடைபெறுகிறது.

கூலாயிலும் சிரம்பானிலும் பிரமாண்டமாகவும் வட்டார மக்களின் பேராதரவோடும் நடைபெற்றது போல, வரக்கூடிய இந்த 2 நிகழ்வுகளுக்கும் அமோக வரவேற்புக் கிடைக்குமென Colors of India எதிர்பார்க்கின்றது.

இந்நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ மின்னிடல் ஊடகம் வணக்கம் மலேசியாவாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!