Latestஇந்தியா

BRICS பாதுகாப்புப் பணியில் Instagram Reel; டெல்லி காவலர் இடைநீக்கம்

புதுடெல்லி, செப்- 15 – BRICS உச்சநிலை மாநாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி காவலர் ஒருவர், பணியின்போது துப்பாக்கிகளுடன் Instagram Reel வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தீபக் பங்கார் என்ற அந்தக் காவலர், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கியிருந்த மத்திய டெல்லியின் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் மாடியில் sniper பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் கைத்துப்பாக்கியைக் கையாள்வது மற்றும் மாடியில் sniper rifle-உடன் இருக்கும் காட்சிகள் அடங்கிய இரண்டு வீடியோக்களை Instagram-இல் பதிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியிடம் மற்றும் அது தொடர்பான சில காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றது பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியது.

இதையடுத்து, அவரை BRICS பாதுகாப்புப் பணியிலிருந்து நீக்கிய டெல்லி காவல்துறை, பணியிடை நீக்கமும் செய்துள்ளது. சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட பாதுகாப்புப் பணிகளில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த விவாதத்தையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!