
புத்ராஜெயா, செப்டம்பர் -26
அரசாங்கத்தின் BUDI95 திட்டத்தின் கீழ், மானியமளிக்கப்பட்ட RON95 எரிபொருள் தொடர்பான பரிவர்த்தனைகள் ஒரு நிமிடத்தில் 30,000-க்கும் மேல் மேற்கொள்ளப்பட முடியும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சாரா திட்டத்தில் ஒரு நிமிடத்தில் 3,000 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடிந்தது ஆனால் BUDI95 திட்டம் ஒரு நிமிடத்தில் 30,000-க்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடிய திறன் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.
அரசின் நிதி மேலாண்மை மேம்பாடு, கசிவுகளை கட்டுப்படுத்தல் மற்றும் நிறுவனங்களில் ஆட்சித்திறன் வலுப்படுத்தல் காரணமாகவே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிந்தது.
அதே சமயம், சில அமைச்சுகளில் ஊழல், கசிவு பிரச்சினைகள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், அவற்றில் ஈடுபட்டவர்கள் முழு அரசுப் பணியாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று அன்வர் தெளிவுபடுத்தினார்.
BUDI95-இன் மானியத் திட்டத்தை தரவரிசைப்படுத்தி, உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கு மட்டுமே பண உதவி வழங்கும் அரசின் முயற்சியும், அரசுப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவே இத்திட்டம் சாத்தியமானது.