
புத்ராஜெயா, அக்டோபர்-9,
BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ், நேற்று மாலை வரை 10 மில்லியன் பேருக்கும் மேல் பயனடைந்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வெண்ணிக்கை, இலக்கு வைக்கப்பட்ட 16 மில்லியன் மலேசியர்களில் சுமார் 62.5% விழுக்காடாகும்.
RM1.99 என்ற மானிய விலையில் இதுவரை 365.7 மில்லியன் லிட்டர் பெட்ரோல் வாங்கப்பட்டுள்ளது.
அவற்றின் மொத்த மதிப்பு RM727.7 மில்லியனாகும்.
இத்திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பதற்கு இதுவே சான்று என அமைச்சு கூறிற்று.
செப்டம்பர் 27- ல் இராணுவ வீரர்கள், போலீஸாருக்கு தொடங்கப்பட்டு, பின்னர் STR உதவிப் பெறுநர்களுக்கும், தகுதிப் பெற்ற இதர அனைத்து மலேசியர்களுக்கும் இந்த BUDI95 மானியத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.