
செராஸ், டிசம்பர்-29,
கோலாலம்பூர், செராஸில் குழந்தைகளை சித்ரவதை செய்தது CCTV காட்சியில் அம்பலமானதால், குழந்தை பராமரிப்பாளரான 26 வயது பெண் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அலாம் இண்டா பகுதியில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில், 6 மாத குழந்தையை அப்பெண் தூக்கி எறிந்து, உருட்டி, அடித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் முன்னதாக வைரலானது.
அக்காட்சியை கண்டு தாம் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானதாக, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கூறியிருந்தார்.
அம்மையத்தில் வேறு சில குழந்தைகளும் அதே போன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கலாம் என பெற்றோர்கள் கவலைத் தெரிவித்தனர்.
போலீஸில் 3 புகார்களும் செய்யப்பட்டன.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ்,
டிசம்பர் 16-ஆம் தேதி அப்பெண்ணைக் கைதுச் செய்தது.
2001 சிறார் சட்டத்தின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.



