Latestமலேசியா

CD:NXT திட்டத்தின் மூலம் 5,000 AI நிபுணர்களை உருவாக்கும் CelcomDigi

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-27 – CelcomDigi Berhad நிறுவனம், CD:NXT என்ற நீண்டகால முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் நோக்கம் 5,000 மலேசிய இளைஞர்களை எதிர்காலத்திற்கு தேவையான AI, தொழில்நுட்பம், தரவு மற்றும் பகுப்பாய்வு திறன்களுடன் உருவாக்குவதாகும்.

CD:NXT மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது – YTP எனப்படும் Young Talent Programme, UniConnects மற்றும் மாணவர் தூதர் திட்டம்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திறந்து வைத்த இந்த நிகழ்வில், 3,600 விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 இளைஞர்கள் முதல்கட்ட YTP குழுவாக இணைந்தனர்.

இந்த முயற்சி, ‘AI-native’ இளைஞர்களை உருவாக்கி, மலேசியாவின் எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் என CelcomDigi கூறியது.

நிறுவனத்தின் CEO Datuk Idham Nawawi, இந்த திட்டம் மலேசியாவின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்கும் புதிய தலைமுறை வல்லுநர்களை உருவாக்கும் என தெரிவித்தார்.

5G-AI உலகில் சிறந்து விளங்குவதற்கான திறன்கள் மற்றும் மனநிலையுடன் இளைஞர்களை மேம்படுத்துவதன் மூலம், CelcomDigi மேம்பட்ட, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் உள்ளடக்கிய ஒரு டிஜிட்டல் தேசத்தை உருவாக்க உதவுவதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!