
கோவை, மார்ச்-4 – பிரபல ஆன்மீகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிமுகம் செய்த Miracle of Mind இலவச தியான செயலி உலகளவில் பெரும் சாதனைப் படைத்துள்ளது.
தமிழகத்தின் கோவை ஈஷா யோக மையத்தில் அண்மையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவின் போது அச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு, அறிமுகப்படுத்தப்பட்ட 15 மணி நேரங்களில் 1 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்து ChatGBT-யின் சாதனையையே அது முந்தியுள்ளது.
1 மில்லியன் பதிவிறக்கங்களைக் கடக்க ChatGPT-க்கு 5 நாட்கள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேரங்களில் Miracle of Mind செயலி, மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஹோங் கோங், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கென்யா உள்ளிட்ட 20 நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்று trending-கில் உள்ளது.
மனநல ஆரோக்கியத்துக்கு தியானப் பயிற்சிகளே சிறந்த தீர்வு என்பதை உலக மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டு வருவதை இது புலப்படுத்துகிறது.
தமிழ் உட்பட 5 மொழிகளில் கிடைக்கும் இச்செயலியில், வழிகாட்டுதலோடு கூடிய 7 நிமிட தியானப் பயற்சி பெரும் வைரலாகியுள்ளது; எளிமை மற்றும் பயனுள்ள வடிவமைப்பால் அனைவரையும் இச்செயலி கவர்ந்துள்ளது.
விரைவில் மாண்டரின், இந்தோனீசிய, வியட்நாம், ஜப்பான், தாய்லாந்து மொழிகளைச் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் 8 பேரில் ஒருவருக்கு மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக, உலக சுகாதார நிறுவனமான WHO தெரிவிக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, மனநல பிரச்சனைகளுக்கு தியானம் தீர்வாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்செயலி, AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவதுவது மற்றொரு சிறப்பம்சமாகும்.