Latestமலேசியா

FashionValet நிறுவனர்கள் வீட்டில் MACC சோதனை; கைப்பைகள், ஆடம்பர கை கடிகாரம் உட்பட 2 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

கோலாலம்பூர், நவம்பர்-7 – சர்ச்சையில் சிக்கியுள்ள மின்னியல் வர்த்தகத் தளமான FashionValet நிறுவனர்கள் வீட்டிலிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC, விசாரணைக்காகப் பல்வேறு பொருட்களைக் கைப்பற்றியுள்ளது.

மொத்தம் 200,000 ரிங்கிட் மதிப்பிலான 11 கைப்பைகள் மற்றும் ஆடம்பர கை கடிகாரம் ஒன்றும் அவற்றில் அடங்கும்.

Mont Kiara-வில் உள்ள Datin Vivy Yusof மற்றும் அவரின் கணவர் Datuk Fadzaruddin Shah Anuar வீட்டில் MACC அதிகாரிகள் நேற்று மாலை சோதனை நடத்திய போது அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்தம்பதி முன்னதாக புத்ராஜெயா MACC தலைமையகத்தில் தங்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்த நிலையில், மாலை 5.30 மணிக்கு அவர்களின் வீட்டுக்கு மேல் சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அரசு நிறுவனங்களான Khazanah மற்றும் PNB இரண்டும் FashionValet-டில் செய்த பங்கு முதலீடு, 43.9 மில்லியன் ரிங்கிட் நட்டமடைந்திருப்பதை அடுத்து அத்தம்பதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!