
கோலாலம்பூர், நவ- 10,
பிலிப்பைன்ஸின் Vigan Citi யிலிருந்து வட மேற்கே 129 கிலோமீட்டர் தொலைவில் Fung -Wong புயல் மையமிட்டிருப்பது இன்று அதிகாலை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய வானிலைத்துறை MetMalaysia அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சூறாவளி மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்று பதிவாகியிருப்பதாக கூறப்பட்டது. Fung – Wong புயல் தற்போது சபாவின் குடாட்டிலிருந்து ( Kudat ) வடகிழக்கில் சுமார் 1,196 கிலோமீட்டர் தொலைவில், மையமிட்டிருப்பதாக மெட்மலேசியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணத்தினால் தென் சீனக் கடலில் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர் , புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூரிலும் இன்று மதியம் 12 மணி வரை இடியுடன் கூடிய கடுமையான மழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கெடாவில் லங்காவி, குபாங் பாசு, Kota Star , Pokok Sena, Yan, Pendang, Kuala Muda, Kulim, Bandar Baharu,
பேராக்கில் Kerian, Larut, Matang, Selama ,Manjung, Perak Tengah, B
Bagan Datuk , Hilir Perak ஆகிய இடங்களிலும் கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரில், சபாக் பெர்னாம், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் , செப்பாங் , ஆகிய இடங்களில் வானிலை மோசமாக இருக்கும். எதிர்பார்க்கப்படுகிறது.



