
கோலாலம்பூர், மே 22 – “Geng Shafik” என அழைக்கப்படும் மனிதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு வங்காளதேச ஆண்கள், நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஒன்பது புலம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில், கடந்த மே 15ஆம் தேதி கிள்ளான் ATIPSOM சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மலேசிய குடிநுழைவுத் துறையான Jabatan Imigresen Malaysia-வின் தலைமை இயக்குநர் டத்தோ சாக்காரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) கூறுகையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கடந்த மே 7ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவித்தார்.
அந்த வீட்டில் சட்டவிரோத குடியேறிகள் (PATI) தங்கவைக்கப்பட்டு, இடைநிலை முகாமாகப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



