
கோலாலம்பூர், மார்ச் 6-I .S குழுவின் பயங்கரவாத நோக்கத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நாட்டின் பல இடங்களில் போலீஸ் சிறப்புப் பிரிவு நடத்திய சிறப்பு நடவடிக்கையில் மூன்று பதின்ம வயதினர் உட்ட அறுவர் கைது செய்யப்பட்டனர்.
16 முதல் 21 வயதுக்குட்பட்ட இந்த இளைஞர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு , கெடா, ஜோகூர் மற்றும் திரெங்கானுவைச் சுற்றியுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆன்லைனில் தீவிரவாத சித்தாந்தத்திலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
ஐஎஸ் தலைவர்களுக்கு உறுதிமொழி எடுப்பது அல்லது விசுவாசத்தை உறுதியளிப்பது மட்டுமல்லாமல், போலீஸ் நிலையங்கள் , முக்கியமான அரசு நிறுவனங்கள் மற்றும் பொது வசதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் அந்த சந்தேக நபர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இது தவிர தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்புதல், ஆட்சேர்ப்பது, பிரச்சாரப் பொருட்களை ஊக்குவித்தல், இளைஞர்கள், பதின்ம வயதினர்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட தாக்குதல்களைத் திட்டமிடுதல் ஆகியவை அவர்களின் நடவடிக்கைகளில் அடங்கும் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில்
(Mohd Khalid Ismail ) கூறினார்.
,



