
11 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு IT திட்ட ஊழல் தொடர்பாக, ஊராட்சி மன்ற மூத்த அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், Hermes, Louis Vuitton , போன்ற சொகுசு முத்திரைகளைக் கொண்ட கைப்பைகளும் காலணிகளும் அடங்கும்; அதோடு 200,000 ரிங்கிட் ரொக்கம், 2 ஆடம்பர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
இது தவிர, 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான மதிப்பில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான 19 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
MACC தலைவர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அதனை உறுதிப்படுத்தினார்.
அந்த மூத்த அதிகாரி கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லில் முதல் 5 பதவிகளில் ஒன்றை வகித்த Jusa B பிரிவைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது.
இதுவரை 15 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்;
மேலும் பலர் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அசாம் பாக்கி சொன்னார்.