Latest

Ivana Smit மரணம்: நீதிமன்ற உத்தரவை மீறிய காவல்துறை – வழக்கறிஞர் குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 13 – நெதர்லாந்து மாடல் இவானா ஸ்மிட் (Ivana Smit) மரண வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்தில் உத்தரவிட்டிருந்தாலும், இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரது குடும்ப வழக்கறிஞர் எஸ்.என். நாயர் கூறினார்.

கடந்த 2017 டிசம்பர் மாதம், 18 வயதான இவானா ஸ்மிட் கோலாலம்பூரிலுள்ள குடியிருப்பபு பகுதியின் 6 வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

2019ஆம் ஆண்டு நீதிமன்றம்,  அறியப்படாத நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்று தீர்மானித்தது.

இந்த ஆண்டு ஜூலை 29 அன்று நீதிமன்றம், காவல்துறைக்கு மீண்டும் விசாரணை நடத்தவும், அதன் முன்னேற்றம் குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கறிஞர் நாயர், காவல்துறை தலைமை இயக்குநர் காலிட் இஸ்மாயில் (Khalid Ismail t)மற்றும் உள்துறை அமைச்சர் சைபுடீன் நஸூஷன் (Saifuddin Nasution Ismail) ஆகிய இருவரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!