
விரைவில் எஸ். பி.எம் தேர்வு முடிவுகள் வெளியாகவிருப்பதால் அடுத்து உயர்க்கல்வி நிலையங்களை குறிவைத்துள்ள மாணவர்கள் TVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்புக்களை வழங்கும் அரசாங்கம் மற்றும் தனியார்துறைகளை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
நமது இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சிகளில் இணைவதற்கான வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் வேலை கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மட்டுமின்றி நமது சமூகத் தலைவர்களும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர்.
சான்றிதழ், டிப்ளோமா, மற்றும் பட்டப்படிப்பு வசதிகளோடு, உயர்ந்த சம்பளம், உடனடி வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, உட்பட பல்வேறு வசதிகளையும் இந்த TVET கல்வித் தகுதியின். வழி பெறமுடியும்.
உள்நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர், தென் கொரியா , ஜப்பான் போன்ற நாடுகளிலும் தொழில் திறன் பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது.
இதனை கருத்தில்கொண்டு கல்வி அமைச்சு மற்றும் மனித அமைச்சின் கீழ் உள்ள பல தொழிற்பயிற்சி நிலையங்களும் தொழிற் கல்லூரிகளும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றன.
இந்த வாய்ப்பை இந்திய சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றனர்.
இதனிடையே – TVET கல்வி திட்டத்தை மேற்கொள்ள விரும்புவோர் Jom Masuk TVET என்ற அகப்பக்கம் வாயிலாக மனுச்செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அரசாங்கத்தின் 9 தொழில் கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி கழகங்களில் நடைபெறும் பயிற்சிகளில் எதாவது ஒன்றில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி ஜூன் 16ஆம்தேதிவரை இந்த தொழிற்கல்வி பயிற்சி திட்டங்களுக்காக விண்ணப்பிக்க மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
திரையில் காணும் வாட்சாப், முகநூல், டெலிகிரேம் போன்ற சமூக வலைத்தளங்களை மேல் விவரங்களுக்கு அணுகுங்கள்.